திரிபுராவில் சிபிஎம் பெரும் சரிவை சந்திக்கிறது
திரிபுரா மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 2018 சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கடுமையான போட்டியை சந்தித்து விட்டது. தற்போது ஆட்சியையும் இழக்கும் நிலைக்கு அது போய் விட்டது. திரிபுராவில் பலம் வாய்ந்த கட்சியாக கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த நிலையான ஆட்சிக்கு மற்றொரு முக்கிய காரணம் முதல்வர் மாணிக் சர்க்கார் என்றும் சொல்லாம். ஆனால் 2018 சட்டசபை தேர்தல் பாஜக படு விவரமாக, தனி மாநிலம் கோரி போராடும் பழங்குடியினர் கட்சியான ஐபிஎஃப்டி கட்சியோடு கை கோர்த்து மறைமுகமாக மாணிக் சர்க்காருக்கு நெருக்கடி கொடுத்து விட்டது. இதுதான், மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறின. பாஜக பெரும்பான்மை பெற்று வருகிறது.. இது தற்போது நடந்து விட்டது.
கருத்துகள் இல்லை