• சற்று முன்

    நுங்கம்பாக்கதில் பிரபல ஜவுளி கடையில் தீ


    சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் வேன் ஹியூசன் என்ற பெயரில் ஆடவர்களுக்கான பிரபல துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று அதிகாலை 4.55 மணிக்கு கரும் புகையுடன் தீ வெளியேறியது. இதைபார்த்த பொதுமக்கள் உடனே தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி எழும்பூர், கீழ்ப்பாக்கம் பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். துணி என்பதால் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இதனால், தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் திணறினர். 
    இதையடுத்து, எழும்பூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மேலும் ஒரு வண்டியும், தேனாம்ேபட்டையில் ஒரு வண்டியும் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம் குடிநீர் வாரியத்தில் இருந்து மூன்று லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பின்னர், சுமார் 2 மணி நேரம் கடுமையாக போராடி வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். மேலும் அருகில் உள்ள கடைகளுக்கும் தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.இந்த விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள துணிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்தின் போது ஊழியர்கள் யாரும் கடையில் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad