Header Ads

  • சற்று முன்

    விதிகளை மீறிய தனியார் ஸ்கேன் சென்டர் ... சீல் வைத்த மத்திய கண்காணிப்பு குழு



    திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கருக்கலைப்பு செய்த ஸ்கேன் சென்டருக்கு மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று ‘சீல்’ வைத்தனர். இந்த சோதனை மாவட்டம் முழுவதும் இன்னும் 2 நாட்கள் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி ஸ்கேன் சென்டர்கள் செயல்படுவதாகவும், கரு கலைப்புக்கு உடந்தையாக இருப்பதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தது. இதன் எதிரொலியாக மத்திய சுகாதாரத்துறை சார்பு செயலாளர் மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவர் அஜய்குமார் தலைமையில், கண்காணிப்பு குழு உறுப்பினர் சுதேஷ்ஜோஷி மற்றும் சென்னை மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஹரிசுந்தரி, கூடுதல் இயக்குனர் ருக்மணி, ரேடியாலஜி நிபுணர் நடராஜன், மருத்துவ துறை விஜிலென்ஸ் டிஎஸ்பி தாமஸ்பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் இன்று திருவண்ணாமலைக்கு வந்தனர். 

    அவர்கள் இங்குள்ள ஸ்கேன் சென்டர்களில் திடீரென சோதனை செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சன்னதி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இயங்கும் ஸ்கேன் சென்டரில் சோதனை நடத்தினர். இதில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்ததும், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ஆவணங்களை, கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் ஸ்கேன் சென்டருக்கு உடனடியாக ‘சீல்’ வைத்தனர். இதே தெருவில் மற்றொரு ஸ்கேன் சென்டரில் நடத்திய சோதனையில் கட்டக்கட்டாக 100க்கும் ேமற்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

    அதில் 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ள குழந்தை, பெண் குழந்தை என கண்டறிந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள், ஆவணங்களில் உள்ள முகவரிகளை வைத்து, பெண் குழந்தைகள் என கண்டறியப்பட்ட கர்ப்பிணிகளின் வீடுகளுக்கு சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.  இதேபோல் திருவூடல் தெருவில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரிலும் நடத்திய சோதனையில் கருக்கலைப்பு செய்ய உடந்தையாக இருந்தது தெரியவந்தது. எனவே ஸ்கேன் கருவியின் ஹார்டு டிஸ்கை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    இதுவரை அங்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் விவரங்களை ஹார்டு டிஸ்க் மூலம் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள ஸ்கேன் சென்டர்களில் 2 நாட்கள் ஆய்வு செய்ய மத்திய சுகாதார துறை கண்காணிப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad