Header Ads

  • சற்று முன்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் காவல் துறையினர் அடிதடி !


    காயமடைந்த குழந்தை – தாக்கிய காவல்படைக்கு தலைமை வகித்த ஏ.எஸ்.பி. செல்வநாகரத்தினம்
    தூத்துக்குடியல் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரணியில் காவல்துறை தடியடி நடத்தியதில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
    தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் தனியார் மண்டபத்தில், கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்சிட் கட்சியின் 22வது மாநில மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது.

    காவல்துறை தாக்குதல்
    இதையொட்டி, நடைபெற்ற பேரணியை சி.பி.எம். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி, அண்ணா நகர் வழியாக சென்றது. அப்போது  சில தொண்டர்கள் சாலையோரம் செல்ஃபி எடுத்ததாக கூறப்படுகிறது.

    தலையில் காயமடைந்த குழந்தை

    அப்போது, அவர்களை வேகமாக செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதாகவும், இதையடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, கூட்டத்தை கலைக்க  தூத்துக்குடி ஏஎஸ்பி செல்வநாகரத்தினம் தலைமையில், காவல்துறையினர் மிகப்பெரிய ரீப்பர் கட்டைகளால் பேரணியில் பங்கேற்ற குழந்தைகள் உள்ளிட்ட தோழர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

    காயமடைந்தவர்களில் ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை
    கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் இருந்தபோதும், அதை பொருட்படுத்தாத காவல்துறையினர்  பெரிய பெரிய கட்டைகளை கொண்டு, கொடூரத்தனமான தாக்குதலை நடத்தினர். காவல்துறையினரின் இந்தத்   தாக்குதலில் பலர்  காயமடைந்தனர். குழந்தைகள் மீதும் தாக்குதல் நடந்தது  அவர்கள் காயமடைந்தனர்.

    இதையடுத்து காவல்துறையினரை கண்டித்து மார்க்சிஸ்ட் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ  பகுதிக்கு விரைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் தொண்டர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து, பேரணி அமைதியாக நிறைவடைந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad