Header Ads

  • சற்று முன்

    கடுகு எண்ணெய் பயன்கள்


    உங்கள் வீட்டு சமையலறையில் இந்த கடுகு எண்ணெய்யை பயன்படுத்தி இருப்பீர்கள். இந்த கடுகு எண்ணெய் கடுகு தாவரத்தின் விதைகளிலிருந்து பெறப்படுகிறது. ப்ராஸ்ஸிகா ஜெனிசியா என்பது தான் இதன் அறிவியல் பெயர். இது சமைப்பதற்கு மட்டுமில்லாமல் கடவுள் வழிபாட்டுக்கும் பயன்படும் முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. சனீஸ்வர பகவானுக்கு இதைக் கொண்டு தான் அபிஷேகம் செய்வார்கள். அந்த அளவுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும், அழகு குறிப்புகளிலும் இது பயன்படுகிறது. நிறைய வீடுகளில் தங்கள் உணவிலும் இந்த எண்ணெய்யை சேர்த்து பலன் பெறுகின்றனர்.


    இதய நோய் வாராமல் தவிக்க 


    கடுகு எண்ணெய்யில் நல்ல கொலஸ்ட்ரால்கள் அதிகமாக உள்ளது. மேனோசேச்சுரேட் மற்றும் பாலிசேச்சுரேட் கொழுப்புகள் இதில் காணப்படுகின்றன. எனவே இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நம் உடலில் நல்ல கொழுப்புகளை கூட்டுகிறது. மேலும் இதில் உள்ள ஓமேகா 3 மற்றும் ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே இதை உங்கள் சமையலில் சேர்த்து கொண்டால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என தற்போதைய ஆராய்ச்சி தகவல்கள் கூட தெரிவிக்கின்றன.



    புற்றுநோய் வராமல் தடுக்கிறது 
    கடுகு எண்ணெய்யில் புற்றுநோயைத் தடுக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வயிறு மற்றும் குடல் புற்றுநோயிலிருந்து நம்மை காக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த எண்ணெய்யில் உள்ள குளுக்கோஷினோலேட் தான்.

    பசியை தூண்டுதல் 
    கடுகு எண்ணெய் இயற்கையாகவே ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. இவை நமக்கு பசியை தூண்டுகிறது. நமது உடல் மெட்டாபாலிசத்தை அதிகரித்து ஜீரண சக்தியை மேம்படுத்தி பசியை தூண்டுகிறது. இது ஒரு இயற்கை ஊக்கியாக செயல்பட்டு ஜீரண திரவமான பித்த நீரை அதிகரித்து கல்லீரல் மற்றும் மண்ணீரல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் நம் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இப்படி எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கடுகு எண்ணெய்யை உங்கள் உணவிலும் மற்றும் பழக்கவழக்கங்களிலும் சேர்க்க மறந்து விடாதீர்கள்.

    சளி மற்றும் இருமல் நீங்க

    இந்த எண்ணெய் நமக்கு அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து நம்மை விடுவிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இது உடல் சூட்டை ஏற்றி சளியை இளகச் செய்து சுவாசப் பாதை வழியாக எளிதாக வெளியேற்றி விடுகிறது. இதிலுள்ள பொருட்கள் சளி, இருமல் மற்றும் நோய்த்தொற்று போன்றவற்றை குணப்படுத்துகிறது. சைனஸ், ஆஸ்துமா போன்றவற்றிற்கும் மருந்தாக செயல்படுகிறது. மேலும் இந்த ஆயில் நமது உடலில் உள்ள வியர்வை சுரப்பியை அதிகரித்து காய்ச்சலால் ஏற்படும் அதிகப்படியான வெப்பநிலையை குறைத்து காய்ச்சலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்கிறது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad