Header Ads

  • சற்று முன்

    தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி நாளை அனைத்துக் கட்சிகளின் மறியல்... ஸ்டாலின் அறிவிப்பு


    சென்னை: தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி நாளை அனுமதியை மீறி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நேற்றைய தினம் திமுக போராட்டம் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. 
    பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நேற்றைய தினம் திமுக போராட்டம் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.
    அப்போது திமுக சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதில் மக்கள், எதிர்க்கட்சிகள், மாணவர்களின் போராட்டத்தை ஏற்று தமிழக அரசு பெயரளவுக்கு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது. பேருந்து கட்டணத்தை திரும்ப பெற கோரி நாளை திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடைபெறும். மாநகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், நகராட்சிகள், ஒன்றிய தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை முமுமையாக ரத்து செய்ய வேண்டும். பேருந்து கட்டண உயர்வாக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். நாளை நடைபெறவுள்ள மறியலுக்கு போலீஸ் அனுமதி தராவிட்டாலும் அனுமதியை மீறி போராட்டம் நடைபெறும். கட்டண குறைப்பு என்பது அரசின் கண்துடைப்பு நாடகம் ஆகும் அனைத்து கட்சிகளின் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படும். மாநில அரசு எடுக்கும் முடிவை பொறுத்தே இந்த கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படும் என்றார் ஸ்டாலின்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad