Header Ads

  • சற்று முன்

    பைக் ரேஸ் வெறியர்களை தனிப்படை போலீஸ் கைது செய்தது



    சென்னை: சென்னையில் தீப்பொறி பறக்க பைக் ரேஸ் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பேரிகாடை தீப்பொறி பறக்க இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டார்.புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ் நடத்துவதை போலீஸார் கண்காணித்து வந்தனர். எனினும் அவர்களையும் மீறி சில இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்டனர்.
    பேஸ்புக்கில் பதிவு
    அப்போது அந்த பேரிகார்டை பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் இழுத்து சென்றார். அப்போது சாலையில் தீப்பொறிக்கும் வகையில் நெஞ்சை பதைபதைக்கும் இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஒரு இளைஞர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதை வீடியோவாக எடுத்து தம்பட்டம் அடித்து கொண்டார்.
    சென்னை காமராஜர் சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 5 இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மேம்பாலத்தில் யாரும் பயணம் செய்ய கூடாது என்பதற்காக போலீஸார் பேரிகார்டை வைத்து தடுத்திருந்தனர்.


    ஒருமையில் விமர்சித்த இளைஞர்
    அந்த வீடியோவில் இளைஞர் பீட்டர் கூறுகையில், நாங்கள் போலீஸார் வைத்த பேரிகாடை பிடித்து இழுத்து சென்றோம். அதில் நெருப்பு பறந்தது. அப்போது அங்கிருந்த போலீஸார் கத்தினர் என்று பெருமையாக கூறும் அந்த இளைஞர் போலீஸாரை ஒருமையிலும், கெட்ட வார்த்தையிலும் பேசியிருந்தார். பேஸ்புக்கில் வந்த இந்த வீடியோவை வைத்து உடனடியாக போலீஸார் அவர்கள் 5 பேரையும் அடையாளம் கண்டனர்.இதையடுத்து போலீஸார் 5 பேரை கைது செய்தனர். இதில் பேரிகார்டை இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது போலீஸார் வெளியிட்டுள்ளனர்.மன்னித்து விடுங்கள் அதில் அவர் கூறுகையில் பேரிகாடை தீப்பொறி பறக்க இழுத்து செல்வது கெத்து என நினைத்தேன். இப்போதுதான் இதனால் பொதுமக்கள் எத்தகைய இன்னலை சந்தித்திருப்பர் என்பது தெரிந்தது. இனிமேல் இது போல் தவறு செய்ய மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டுள்ளாசென்னை: சென்னையில் தீப்பொறி பறக்க பைக் ரேஸ் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பேரிகாடை தீப்பொறி பறக்க இழுத்து சென்ற இளைஞர் பீட்டர் மன்னிப்பு கேட்டார்.புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பைக் ரேஸ் நடத்துவதை போலீஸார் கண்காணித்து வந்தனர். எனினும் அவர்களையும் மீறி சில இளைஞர்கள் ரேஸில் ஈடுபட்டனர்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad