Header Ads

  • சற்று முன்

    ஏல சீட்டினால் சீரழியும் குடும்பங்கள்

    சிட்டுக் கட்டு 
    என்னட பெயரிலே சீட்டு கட்டு என்று வருகிறதே என்று யோசிகிரிங்களா? உண்மையை சொல்லனும்னா சீட்டுக் கட்டு போல தான் மனித வாழ்கையும், கட்டாக இருக்கிற வரையில் எல்லாம் நல்லா இருக்கும். கட்டு சிதறினா ஆட்டம் ஆரம்பம். வாழ்கை என்கிற கட்டு சிதறினா வழக்கை ஆட்டம் முடியுது ஆர்த்தம். அதிலிருந்து மீள்றது ஒரு சிலரால மட்டும் தான் முடியும்.

    குடிசை தொழிலாக மாறி வரும் ஏல சீட்டு 
    இன்றைக்கு பெரும்பாலான ஆண்கள் பொழுதுபோக்குக்காக ஆடுவது சீட்டு அதாவது க்ளப்க்கு போய் சீட்டு ஆடி குடும்பத்தை நடுதெருவுக்கு கொண்டு வந்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனா இப்போ நகரில் பெரும்பாலான இடங்களில் ஏல சீட்டு நடத்தி வருகின்றனர். வியாபாரிகள் ஏலசீட்டு நடத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும்,குடிசை தொழில் போல சில பெண்கள் ஏலசீட்டு நடத்துகின்றனர். சீட்டு நடத்துபவர்கள் ஏல சீட்டில் ஆட்களை சேர்பதற்கு தரகர்களை வைத்துக் கொள்கின்றனர். இவர்களை ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி ஆட்களை சேர்கின்றனர். வீட்டிற்கு தெரிந்தும் தெரியாமலும் ஏல சீட்டில் சேர்ந்துவிடுகின்றனர். முதலில் அதிக தள்ளு போவதால் குறைந்த பணத்தை கட்டிவருகின்றனர். மாதங்கள் போக போக தள்ளு அதிகரிப்பதால் அதிக பணம் காட்டும்போது இல்லத்தரசி பெண்கள் திண்டாடுகின்றனர். முன்பெல்லாம் ஏல சீட்டு நடத்துபவர்கள் பணம் கொடுக்க முடியாமல் தலைமறைவாவது அல்லது தற்கொலை செய்து கொள்வது வழக்கம். ஆனால் இப்போது ஏலசீட்டு கட்டுபவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்படுளனர். ஏலசீட்டு நடத்துபவர்கள் இரண்டாவது சீட்டு நடத்துபவர்களே எடுத்துக் கொள்வதால் அந்த பணத்தை தண்டல்விட்டு அதிக லாபம் ஈட்டுவதுடன் அந்த பகுதியில் தாதாவாக வலம் வருகின்றனர்.  பிரச்சனைக்கு அஞ்சுபவர்களை பகடைகாயாக பயன்படுத்தி அதில் குளிர் காய்க்கின்றனர்.

    பெண்கள் சீட்டு மட்டுமல்லாது பண்டிகை கால பண்டு பிடிக்கின்றனர். அதாவது தீபாவளி, பொங்கல், என பண்டுகள் பிடித்து அந்த பணத்தை அதிக வட்டிக்குவிட்டு அதில் வரும் லாபத்தை அனுபவித்து வருகின்றனர்.இதனால் பெரிய பெரிய குடும்பங்கள் தெருவிற்கு வருவதும் சிறிய குடும்பங்கள்  சகஜமாகிவிட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad