Header Ads

  • சற்று முன்

    4 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டை நடத்த தமிழக அரசு ஆலோசனை

    சென்னை : 4 ஆண்டுகளுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள்  மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2013ம் ஆண்டிற்கு பிறகு இந்த மாநாடு நடத்தப்பட வில்லை. 

    இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வரும் பிப்ரவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 5-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடனும், 6-ஆம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
    7
    ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மாவட்டங்களில் உள்ள பிரச்சினைகள், அரசுத் திட்டங்கள், மக்களுக்கான அடிப்படை வசதிகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், குற்றவிகிதத்தை குறைத்தல் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad