வெடிக்கும் மீனவர் போராட்டம் ......

ஒகி புயலால் பாதிக்கப்பட மீனவர்களை தமிழக அரசு முறையாக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடாத காரணத்தால் இன்றைக்கு போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடலில் காணாமல்போன மீனவர்களை மீட்பதில் மத்திய அரசின் ராணுவம் நேவி கோஸ்ட்கார்டு இவைகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து
நீரோடியிலிருந்து ஒரு மக்கள் படையும், வள்ளவிளையிலிருந்து ஒரு மக்கள் படையும் சின்னத்துறையிலிருந்து ஒரு மக்கள்படையும் சுமார் 12 கி.மீ தூரம் வழிநெடுக முழக்கம் எழுப்பி பதாகைகளுடன் வந்து குழித்துறை ரயில் நிலையத்தில் சங்கமித்து புரட்சி செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை