த.பாண்டியன் உடல் நல குறைவால் மருத்துவமணையில் அனுமதி!
உடல்நலக் குறைபாடு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தா.பாண்டியனை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியனுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துமவனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது தா.பாண்டியனுக்கு கடந்த சில நாள்களாக சளி, இருமல் இருந்துள்ளதாகவும், அதனாலேயே அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று தா.பாண்டியனிடம் உடல்நலம் விசாரித்தார்.
கருத்துகள் இல்லை