கட்சி தாவிய நபர் பாஜகவின் ஆர்.கே. நகர் வேட்பாளராக தமிழிசை அறிவிப்பு
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுகவின் மருதுகணேஷ், அதிமுகவின் மதுசூதனன், சசிகலா அக்காள் மகன் தினகரன், நடிகர் விஷால், தீபா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
கங்கை அமரன் மறுப்பு
இத்தேர்தலில் பாஜக சார்பில் யாரை நிறுத்துவது என்பதில் பெரும் குழப்பம் நீடித்து வந்தது. கடந்த முறை போட்டியிட்ட இசை அமைப்பாளர் கங்கை அமரன் இம்முறை போட்டியிட மறுத்துவிட்டார். இதனால் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்ய முடியாமல் பாஜக திணறியது.
பாஜக அறிவிப்பு
இந்நிலையில் கரு. நாகராஜன், ஆர்.கே.நகரில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலராக இருந்தவர் கரு. நாகராஜன். அங்கிருந்து பாஜகவுக்கு தாவி தற்போது ஆர்.கே.நகர் வேட்பாளராகி இருக்கிறார் கரு.நாகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை