Header Ads

  • சற்று முன்

    கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளி சீனா 13வது இடத்தில் உள்ளது


    உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக இருக்கும் சீனாவில், 1 பில்லியன் டன் அதாவது 100 கோடி டன் அளவிலான கச்சா எண்ணெய் தளத்தைக் கண்டுபிடித்துள்ளது எனச் சீனாவின் முன்னணி செய்தி நிறுவனமான ஜின்ஹூவா தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனா தனது உற்பத்தியைத் துவங்கி சந்தைக்குக் கொண்டு வரும்பட்சத்தில் கச்சா எண்ணெய் சந்தையில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் மத்தியில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படும்.

    ஜின்ஜான்ங் பகுதி 
    சீனாவின் ஜின்ஜான்ங் பகுதியில் இருக்கும் ஜூகார் பேசின் பகுதியில் 100 கோடி டன் அளவிலான கச்சா எண்ணெய் படிமம் இருப்பதைச் சீனாவின் தேசிய பெட்ரோலியம் கார்பரேஷன் கண்டுபிடித்துள்ளது.
    கணடுப்பிடிப்பு 



    சீனாவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் சுமார் 1.24 பில்லியன் டன் அளவிலான கச்சா தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 520 மில்லியன் டன் அளவிலான உற்பத்தி தளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என் சீனா பொதுத்துறை நிறுவனமான பெட்ரோசீனா தெரிவித்துள்ளது.

    10 வருட ஆய்வு 


    கடந்த 10 வருடமாகச் செய்யப்பட்ட ஆய்வின் பயனாகத் தற்போது இந்தக் கச்சா எண்ணெய் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனப் பெட்ரோசீனா.

    சீனாவின் வேகம்.. 
    உலகநாடுகளில் இருக்கும் எண்ணெய் கிணறுகளில் கச்சா எண்ணெய் அளவுகள் குறைந்து வரும் நிலையில், சீனா தற்போது கச்சா எண்ணெய் வளத்தைத் தேடும் பணிகளை அதி விரைவாக இயக்கி வருகிறது.

    ஒரு நாளுக்கு.. 



    சீனா தற்போது ஒரு நாளுக்கு 27,000 பேரல் எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறது. இதன் மூலம் உலகில் அதிகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளி சீனா 13வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad