• சற்று முன்

    மீளா துயரத்தில் ஆழ்த்திய நாள் !! துயரத்தில் மீளா மக்கள்..........

    சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்கு இன்று 
    முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.



    பல புயல்களை சந்தித்த தமிழக மக்கள் மீண்டு வந்தனர். பல இன்னல்களையும் சந்தித்து வென்ற தமிழக மக்களுக்கு முன்னாள் முதல்வர் மறைந்த அன்நாள் இன்று துக்க நாளாக அனுசரிக்கும் நாள் வரை மக்கள் இன்னமும் அந்த துயரத்தில் இருந்து மீளவில்லை. 



    ஆளுமை திறன், எதற்கும் அஞ்சாத துணிவு, யாருக்கும் அடிப்பணியாத தன்மை, திட்டங்களை வகுப்பதில் வல்லமை என பன்முகத் தன்மை கொண்டவர் ஜெயலலிதா. எந்த தேர்தலாக இருந்தாலும் இவருடன் கூட்டணி வைக்க போட்டி போடுவார்களே தவிர, இவர் யாரிடமும் கூட்டணிக்காக அணுகியதில்லை.

    அப்பல்லோவில் அனுமதி 





    ஜெயலலிதாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாட்டினால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்துகிடந்தனர்.
    ஒன்றும் இல்லை நன்றாக இருக்கிறார்




    ஜெயலலிதாவுக்கு ஒன்றும் இல்லை. அவர் உடல்நல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என்றும் அவர் வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார் என்றும் மருத்துவமனை அறிக்கைகளை அளித்தன. இது அங்கு கூடியிருந்த மக்களுக்கு சற்று தெம்பை அளித்தது. ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் செல்வதாக கூறப்பட்ட வதந்திகளை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.


    டிசம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பு
    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சுமார் 74 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. லண்டன் மருத்துவமனை மருத்துவர் பீலே வரவழைக்கப்பட்டார். ஆனால் நிலைமை கையை சென்று விட்டதாக பீலே தெரிவித்தார். ஜெயலலிதாவின் உயிரை காக்க பல்வேறு உயிர் காக்கும் முயற்சிகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன

    ஜெயலலிதா மண்ணுலகை விட்டு பிரிந்தார் 




    ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. என்றாவது ஜெயலலிதாவின் முகத்தை பார்த்துவிடுவோம் என்று எண்ணி மருத்துவமனை வாயிலில் காத்திருந்த மக்கள், தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினார்.


    ஜெ.உடல் நல்லடக்கம் 



    ஜெயலலிதாவின் உடல் டிசம்பர் 6-ஆம் தேதி ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் மெரினாவில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகில் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்றுடன் இந்க மாபெரும் சகாப்தம் முடிவடைந்து ஓராண்டுகள் நிறைவடைகிறது. ஜெயலலிதா மறைந்தாலும் அவர் ஆற்றிய திட்டங்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

    நீங்கள் நடித்து போதும் .... இன்னும் ஏமாற நான் அங்கு இல்லை ...






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad