Header Ads

  • சற்று முன்

    லஞ்சம்: சிக்கிக் கொண்ட கலால்துறை உதவி ஆணையர்!

    விருதுநகர்:  கலெக்டர் அலுவலகத்தில்  19 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கலால்துறை   உதவி கமிஷனரை  லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.


    விருதுநகர் மாவட்ட கலால்துறையின் உதவி கமிஷனராக இருப்பவர் பழனியாண்டி. டாஸ்மாக் கடைகளில் நடக்கும் முறைகேடுகள் மீதும், கூடுதல் விலைக்கு சரக்குகள் விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி கலால்துறையை சேர்ந்த அதிகாரிகளின் முக்கிய பணியாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் அதிரடி சோதனை நடத்திய உதவி கமிஷனர் பழனியாண்டி, அங்கு கோப்புகள் சரிவர பராமரிக்கப்படவில்லை என்று சொல்லி அந்த கடையின் சூப்பர்வைசர் ராஜ்குமாரை கண்டித்தார்.
    மேலும் இது பற்றி டாஸ்மாக் மாவட்ட மேனேஜரிடம் புகார் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், ராஜபாளையம் பகுதியில் உள்ள 33 டாஸ்மாக் கடைகளில் மாதம் ஆயிரத்து 500 வீதம் வசூலித்து, தனக்கு தர வேண்டும் என்று உத்தரவிட்டு சென்று விட்டார்.
    இதையடுத்து டாஸ்மாக் சூப்பர்வைசர் ராஜ்குமார், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனையின் பேரில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரம் ரூபாய் தருவதாக செல்போனில் தொடர்பு கொண்டு உதவி கமிஷனர் பழனியாண்டியிடம் தெரிவித்தார். உடனே அவர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலால் பிரிவு அலுவலகத்திற்கு வரும்படி கூறினார்.
    இன்று மாலை 4 மணியளவில் சூப்பர்வைசர் ராஜ்குமார் ரூ.19 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை நேரடியாக அங்கிருந்த கிளர்க் சீனிவாசன் மூலம் உதவி கமிஷனர் பழனியாண்டியிடம் கொடுத்தார். தயாராக அலுவலகத்தில் காத்திருந்த விருதுநகர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வெங்கடேஷ்வரன், இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென்று பழனியாண்டியின் அறைக்குள் நுழைந்து அவரிடம் இருந்த லஞ்ச பணம் ரூ.19 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
    அதோடு உதவி கமிஷனர் பழனியாண்டி மற்றும் கிளர்க் சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad