Header Ads

  • சற்று முன்

    ‘பண மதிப்பிழப்பால் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பு!’’ - மன்மோகன் சிங்

    ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்’’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 


    நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘‘கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட நடவடிக்கையால் நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். பண மதிப்பிழப்பின்போது ஏராளமான கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வரிசையில் நின்று 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எனவே, இனிவரும் காலங்களில் பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளைத் தவிருங்கள்’’ என்றார்.கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்தார். இதனால் வங்கிகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வர்த்தகர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள். மேலும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் நாடெங்கும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்’’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad