• சற்று முன்

    ஆதாரம் இல்லாமல் அமைச்சர்கள் மீது புழுதிவாரி தூற்றக்கூடாது - ஜெயகுமார்



    சென்னை: அன்புசெழியனுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாராவது வந்தீங்க அப்புறம் நடக்கிறதே வேற என்கிற தொணியில் ஒரு விரலை உயர்த்தி பேசிய விஷாலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார். கந்து வட்டி கொடுமையால் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை தமிழ் திரை உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அன்பு செழியன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அன்புசெழியனின் மிரட்டலுக்குப் பயந்து சொத்துக்களை எழுதிக்கொடுத்துள்ளனர். இதனிடையே நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் தயாரிப்பாளர் சங்கத்தலைவருமான விஷால், திரைப்பட உலகில் இதுதான் கடைசி மரணமாக இருக்கும். இந்த மாதம் வட்டி கட்ட முடியவில்லையென்றால் எங்கேயும் ஓட மாட்டோம். தயாரிப்பாளர் சங்கத் தலைவராகச் சொல்கிறேன்... கந்து வட்டிக்குக் கொடுத்து விட்டு மிரட்டினால் இனி சும்மா இருக்க மாட்டோம் என்றார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் அன்புச்செழியனுக்கு ஆதரவாக வரக்கூடாது என்று கூறினார். அப்படி யாராவது வந்தா அப்புறம் நடக்கிறதே வேற என்று ஒரு விரலை காட்டி வசனம் பேசினார். இதுவரை அன்புச் செழியன் கைது செய்யப்படமால் இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது என்றும் கூறினார். இதற்கு பதிலடி தரும் விதமாக பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் விஷால் ஆதாரம் இல்லாமல் அமைச்சர்கள் மீது புழுதிவாரி தூற்றக்கூடாது என்று கூறினார். அமைச்சர்கள் யாரும் அன்புச்செழியனுக்கு ஆதரவில்லை. நடிகர்கள் அனைவரும் நிதி திரட்டி சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யலாம். அதை விட்டு விட்டு அமைச்சர்களை ஆதரமில்லாமல் பேசக்கூடாது. பிரகாஷ் ராஜ் போன்றவர்களுக்குத்தான் அடிதடி, மிரட்டல் எல்லாம் கை வந்த கலை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad