Header Ads

  • சற்று முன்

    அமரர் சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் மணி மண்டபம்: நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஈபிஎஸ் பேச்சு



    தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தூத்துக்குடியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர்எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

    தூத்துக்குடி அரசு ஐடிஐ வளாகத்தில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சட்டமன்ற பேரவை தலைவர் தனபால் தலைமை தாங்கினார். துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தனர். தமிழக வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை இயக்குனர்வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சிறப்புரையாற்றினார். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, வல்லநாடு அருகேஅகரத்தில் தடுப்பணை கட்டப்படும். தூத்துக்குடி மாநகராட்சியின் 4வது குடிநீர் திட்டம் ரூ.282 கோடி மதிப்பீட்டில் துவங்கப்ப ட்டுள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டம்தூத்துக்குடி என்று கூறினார்.
    மேலும் அமரர் சிவந்தி ஆதித்தனாருக்கு, திருச்செந்தூரில் மணி மண்டபம் கட்டப்படும் 2018-19-ல் மணி மண்டபம் கட்டும் பணிகள் துவங்கும் அதிமுகவின் ஒரு தொண்டனைக்கூடதொட்டுப்பார்க்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பொய்யை சொல்லிக்கொண்டிருக்கிறார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
    மேலும் பேசிய அவர் ஏரல்-ஐ தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய வருவாய் வட்டம் தோற்றுவிக்கப்படும். கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில், பெரியசாமிபுரம் மற்றும் அகிலாண்டபுரம் ஆகிய இடங்களில் புதிய கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் தூத்துக்குடி வ.உ.சி. சந்தையினை நவீனப்படுத்தி, வாகனங்கள் நிறுத்தும் வசதியுடன், புதிய வணிக வளாகம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


    கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு டயாலிசிஸ் கருவிகள், எண்டோஸ்கோப் ஆய்வக உபகரணங்கள் வழங்கப்படும். ஏரல் அரசு மருத்துவமனையில் நவீனகண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும். மேலும் திருச்செந்தூர் சமுதாய சுகாதார மையத்தில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். கருங்குளம்மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.

     விளாத்திகுளம் பகுதி, பெரியசாமிபுரம் கிராமம் மற்றும் வேம்பார் கிராமத்தில் வேம்பாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும். ஸ்ரீவைகுண்டம் வட்டம், அகரம் குடியிருப்புஅருகே வல்லநாடு கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். சாத்தான்குளம் வட்டம், பள்ளக்குறிச்சி கிராமத்தில் கருமேனி ஆற்றின் குறுக்கே ஒருதடுப்பணை கட்டப்படும். கோவில்பட்டி வட்டம், ஆவுடையம்மாள்புரம் கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணை கட்டப்படும்.கோவில்பட்டி வட்டம், சிதம்பரம்பட்டிகிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தில் உப்போடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். உடன்குடி,செட்டிக்குறிச்சி, அரசரி கிராமம் மற்றும் தூத்துக்குடி கடற்கரை சாலை ஆகிய 4 இடங்களில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்
    விழாவில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாவட்ட செயலாளர் சித செல்லப்பாண்டியன் ஆகியோர் முதல்வர் to,துணை முதல்வர்பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் வெங்கடேஷ் நினைவு பரிசு வழங்கினார். விழாவில் தியாகராஜ் நட்டர்ஜி எம்பி, எம்எல்ஏ.சண்முகநாதன்,மற்றும் அமைச்சர்கள்,மாவட்ட நிர்வாகிகள், பயனாளிகள்,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad