எகிப்து மசூதியில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்.. தொழுகைக்கு வந்த 155 பேர் பலி
சீனாய் : எகிப்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 155 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எகிப்தின் சீனாய் தீபகற்பத்தில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. எகிப்தின் சீனாய் தீபகற்பத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று மாலை திடீர் என்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. மசூதியில் தொழுகை முடித்துவிட்டு மக்கள் திரும்பும் போது இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்து இருக்கிறது.
கையில் பெரிய துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தினர். மேலும் கையெறி குண்டுகளை அந்த மசூதிக்குள் வீசியுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலில் 155 பேர் மரணம் அடைந்துள்ளனர். 120 பேர் காயம் அடைந்துள்ளனர். மரணம் அடைந்த 155 பேரில் 40 பேர் போலீஸ்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை