• சற்று முன்

    இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 172 ரன்னில் ஆல் அவுட்

    இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்களில் ஆட்டமிழந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கம் முதலே திணறியது. ராகுல், தவான், கோலி ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளையும், லக்மல் வீழ்த்தினார்.

    மழை குறுக்கீடு அதிகமாக இருந்ததால் போட்டி அவ்வப்போது நிறுத்தப்பட்டது. நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் சஹா, சமி, ஜடேஜா ஆகியோர் மட்டும் ஓரளவு ரன்கள் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    இலங்கை தரப்பில் லக்மல் 4 விக்கெட்டுகளையும், காமேஜ், சனகா, மற்றும் பெரெரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad