Header Ads

  • சற்று முன்

    திருவோடு ஏந்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்


    மானவாரி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்ககோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திருவோடு ஏந்தி போராட்டம்

    பயிர்காப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்களை நடத்த வருகின்றனர். இந்நிலையில் நேற்று  விளாத்திகுளம், புதூர் யூனியன் பகுதிகளில் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு மட்டும் ரூ.29கோடி பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் உளுந்து,பாசி,கம்பு,மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவில்பட்டி, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தார் தாலூகாவிற்கு உட்பட்ட 6 பிர்காவிற்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் மானவாரி விவசாய பயிர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தியும், சமீபத்தில் வழங்கப்பட்ட 29கோடிரூபாய் பயிர்காப்பீட்டு தொகையில் முறைகேடுகள் நடைபெற்று  இருப்பதாகவும், சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தியும் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் ஓ.ஏ.நாரயணசாமி தலைமையில் 300க்கும் மேற்பட்டவர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண்மைதுறை, புள்ளியியல் துறை தவறான நடவடிக்கையினால் தங்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்றும், குறிப்பட்ட சிலர் பயன் அடைவதற்காக பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.வரும் 20ந்தேதிக்குள் முறைகேடுகளை களைந்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்காப்பீட்டு தொகை வழங்கவில்லை என்றால் தூத்துக்குடியில் வரும் 22ந்தேதி நடைபெறும் எம்.ஜீ.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளனர்.
                                                                                                                           இளசை லெனின்
                

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad