கர்நாடகாவில் வரப்போகிறது மது விலக்கு..தமிழகத்தில் வருமா ?
பெங்களூர்: கர்நாடகாவில், மது ஒழிப்பு சட்டம் கொண்டுவர சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு திட்டமிட்டுள்ளது. பீஹாரில் நிதிஷ்குமார் அரசால் மது ஒழிக்கப்பட்டது போன்று, கர்நாடகாவிலும் மதுவை ஒழிப்பதற்கு சித்தராமையா அரசு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, கர்நாடக மது ஒழிப்பு வாரியம் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள், பீஹார் முதல்வர், நிதிஷ் குமார், கலால் துறை அமைச்சர்மற்றும் அம்மாநில உயரதிகாரிகளை சமீபத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி, அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுகளுக்கு பிறகு அதன் அறிக்கையை சித்தராமையாவிடம் வழங்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பெண்கள் வாக்குகளை கவரும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மது விலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு சில நூறு மதுக்கடைகளை மூடியதோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை