மறக்க முடியுமா ?
பண மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது. அந்த தினத்தை மக்கள் யாராலும் மறக்க முடியாது. கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் மத்திய அரசு திடீர் என்று கடந்த ஆண்டு நவம்பரம் மாதம் 8ம் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டது. மேலும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
வங்கி
பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பை கேட்டு பணக்காரர்கள் அல்ல அன்றாடம் கஷ்டப்படும் ஏழைகள் தான் அதிர்ச்சி அடைந்தனர். கையில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகளில் மணிக்கணக்கில் கால் வலிக்க நின்றனர்.
இறப்புகள் முறையான திட்டமிடல் இல்லாமல் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது பலர் உயிர் இழந்தனர். பல ஏடிஎம் மையங்களில் பணமும் இல்லை.
படுதோல்வி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை படுதோல்வி அடைந்துள்ளது. இது மத்திய அரசின் மிகப் பெரிய தவறு என்று பாஜக தலைவர்கள் சிலரே ஒப்புக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கலாம் என்ற அறிவிப்பால் மக்கள் பட்டபாடு கொஞ்சம் இல்லை. மோடியின் இந்த செயலால் பல திருமணங்கள் தள்ளிப் போயின. ஆத்திர அவசரத்திற்கு காசில்லாமல் பல உயிர்கள் பரிதாபமாக போயின. இத்தனைக்கும் காரணமான அந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான நாளை மக்கள் கருப்பு தினமாகவே பார்க்கிறார்கள்.
கருத்துகள் இல்லை