• சற்று முன்

    சின்னத்திற்கு ஏது சக்தி!

    "இரட்டை இலையின் சக்தியை நிரூபிப்போம்" என்கிறார் முதல்வர் இ.பி.எஸ்.
    * லட்சியம், கொள்கையின் மீதான சக்தி!
    * மக்கள் நலன்களுக்கான போராட்ட த்தின் மீதான சக்தி!
    * நல்லாட்சியின் மீதான சக்தி!
    * அமைப்பு பலத்தின் மீதான சக்தி!
    போன்றவை தேர்தலில் சின்னங்கள் மூலம் பிரதிபலிக்கும்.
    இப்போது இவை எதுவுமே இல்லாமல் இலைக்கு எங்கிருந்து சக்தி வரும்?
    முதுகெழும்பு இல்லாத பிராணிகள் கூட எதற்கும் அடிமையாக இருப்பதில்லை!
    ஆனால் வாக்கு  வங்கி என்று சொல்லப்பட்ட அம்மா இல்லாத நிலையில், அமைப்பே சிதைந்த நிலையில்!
    கொத்தடிமை போன்று குனிந்து, வளைந்து பாஜக வுக்கு சேவகம் செய்பவர்களுக்கு இரட்டை இலை எப்படி சக்தியை கொடுக்கும்!
    உங்கள் அம்மா ஜெ. உயிரோடு இருந்த போதே 1996 மற்றும் 2004 நாடாளு மன்றத் தேர்தலில் ஒரு இடத்தை கூட வெல்ல முடியாமல் இரட்டை இலை சக்தி இல்லாமல் மடிந்ததே!
    மறந்து விட்டதா?
    பாஜக வின் தயவால் இரட்டை இலை சின்னம் கிடைத்திருக்கலாம்! ஆனால் இப்போது இலைக்கு சக்தி இல்லை.

                                                                                                     இளசை .எஸ்.எஸ். கனேசன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad