• சற்று முன்

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததேன் .........

    சென்னை: மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவர் நலமடைந்து விட்டார் என்றும் விரும்பும் போது வீடு திரும்புவார் என்றும் கடந்த ஆண்டு இதே நாளில் டாக்டர் பிரதாப் ரெட்டி அறிவித்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. தொண்டர்கள் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர் உடல்நிலை சிறப்பாக மேம்பட்டிருப்பதாகவும் எப்போது வீடு திரும்புவது என்பதை ஜெயலலிதா முடிவுசெய்வார் என்றும் அந்த மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி செய்தியாளர்களிடம் அறிவித்தார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி, முதல்வர் நன்றாக உடல்நலம் தேறியிருப்பதாகக் கூறினார்.

    குணமடைந்தார் ஜெயலலிதா 


    தனக்கு வேண்டியவற்றை அவர் கேட்கிறார் என்றும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார் என்றும் பிரதாப் ரெட்டி கூறினார். பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள் இணைந்து முதல்வரைக் குணப்படுத்தியிருப்பதாக பிரதாப் சி ரெட்டி கூறினார்.

    விரும்பும் போது வீடு திரும்புவார் 


    எப்போது சாதாரண அறைக்குச் செல்வார், வீடு திரும்புவார் என்பது ஜெயலலிதாவைப் பொறுத்தது என்றும் சிகிச்சையின் முக்கியமான பகுதியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுதான் கவனிக்கத்தக்கது என்றும் பிரதாப் ரெட்டி கூறியிருக்கிறார். 
    ஜெயலலிதா முடிவு தான் எப்போது வீடு திரும்பி, அரசுப் பணிகளைக் கவனிப்போம் என ஜெயலலிதா எதிர்பார்த்திருப்பதாகவும் ஆனால், எப்போது வீடு திரும்புவது என்பதை ஜெயலலிதா முடிவுசெய்வார் என்றும் பிரதாப் ரெட்டி குறிப்பிட்டார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad