• சற்று முன்

    ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுகவில் மும்முனை வேட்பாளர்கள் போட்டி நிலுவுக்கிறது வேட்பாளர் நாளை அறிவிப்பு-


    நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் மீண்டும் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அதிமுக(அம்மா) கட்சியின் வேட்பாளராக தினகரன் போட்டியிட இருக்கிறார். திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீ, மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை மீட்டிருக்கும் அதிமுகவின் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. கடந்த முறை போட்டியிட்ட மதுசூதனன் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். ஆனால் ஓபிஎஸ் அணியிலேயே கே.பி. முனுசாமி போட்டியிட முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அணியோ புதியதாக ஒருவரை நிறுத்தலாமா என யோசித்து வருகிறது. இந்த நிலையில் நாளை காலை அதிமுக தலைமையகத்தில் ஆட்சி மன்ற குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்துக்குப் பின் அதிமுக வேட்பாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad