• சற்று முன்

    பூமி வட்டம் இல்லை தட்டை தான்.. நிரூபிக்கிறேன் பாருங்க..

    பூமி வட்டம் இல்லை தட்டை தான்.. நிரூபிக்கிறேன் பாருங்க.. ராக்கெட்டில் பறந்து சாதித்த புத்திசாலி
    கலிபோர்னியா: பூமி தட்டையாக இருக்கிறது என நிரூபிப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக ராக்கெட் தயாரித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அவர் தனது சொந்த ராக்கெட்டில் பறந்து சாதனையும் செய்து இருக்கிறார். பூமியில் இருந்து பல மைல் தூரம் ராக்கெட்டில் சென்று அங்கு இருந்து இவர் பூமியை பார்க்க முயற்சி செய்து வருகிறார். அதன்முலம் இவர் பூமி வட்டம் இல்லை தட்டை தான் என நிரூபிக்க விரும்புவதாக கூறுகிறார். மேலும் இவர் இதற்கு முன்பே பல சாதனைகளை செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் இவர் கின்னஸ் சாதனை பட்டம் கூட வாங்கி இருக்கிறார். 

    தட்டையான பூமி 


    பூமி வட்டம் இல்லை தட்டைதான் என நிரூபிப்பதற்காக அமெரிக்காவில் பல இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு பெரிய கருத்தரங்கம் ஒன்றை அமெரிக்காவில் நடத்தியது. அங்கு இருந்த 'மைக் ஹுக்ஸ்' என்ற நபர் தற்போது பூமியை தட்டை என்று நிரூபிப்பதற்காக புதிய வித்தியாசமான முயற்சி ஒன்றை செய்து இருக்கிறார்.

    சொந்த ராக்கெட் 


    அவர் கடந்த நான்கு வருடமாக சொந்தமாக ராக்கெட் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். அதன்படி ஒருவாரத்திற்கு முன்பு உண்மையாக நீராவியில் இயங்கும் சொந்த ராக்கெட் ஒன்றை உருவாக்கினார். ராக்கெட்டை உருவாக்கியது மட்டும் இல்லாமல் அதை 'மோஜாவே' என்ற பாலைவன பகுதிக்கு எடுத்துச் சென்று விண்ணில் ஏவினார். அந்த ராக்கெட்டில் தன்னை இறுக்கமாக கட்டி 550 தூரம் பறந்து உள்ளார்.


    திட்டம் என்ன 
    அவர் இப்போது மிகவும் குறைந்த தூரமே வானத்தில் பறந்து இருக்கிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக வானத்தில் ராக்கெட் மூலமாக பறந்து பூமி எப்படி இருக்கிறது என்று உயரத்தில் இருந்து பார்க்க விரும்புவதாக கூறுகிறார். மேலும் தட்டையாக இருக்கும் பூமியின் புகைப்படத்தை எடுத்து கண்டிப்பாக உண்மையை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த செயல் அதிக தூரம் ராக்கெட்டில் தனியாக பறந்த நபர் என்று கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக பதிவாகி இருக்கிறது

    மைக்கின் பேட்டி 

    இந்த நிலையில் இந்த வித்தியாசமான மனிதர் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் ''பூமி பல காலமாக தட்டையாகத்தான் இருக்கிறது. நாசாவும், இல்லுமினாட்டிகளும் சேர்ந்துதான் பூமி உருண்டை என்று கூறியுள்ளனர். அதை நான் மக்களுக்கு புரிய வைப்பேன். என்னை போலவே என் நண்பர்கள் பலர் இந்த முயற்சியில் இறங்கி உள்ளனர்'' என்று கூறியிருக்கிறார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad