• சற்று முன்

    கமல் புதுக் கட்சி.. பிளான் ரெடி?

    கமல் புதுக் கட்சி.. பிளான் ரெடி?   7ம் தேதி அறிப்பார் என் எதிர்பாப்பு 

    சென்னை: நவம்பர் 8ம் தேதிக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது. கடந்த ஆண்டு அதே நாளில்தான் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்து மக்களின் வயிற்றில் அடித்தது மத்திய அரசு. அந்த நாளில் மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை செலுத்த ஒட்டுமொத்த தேசமும் தயாராகி வருகிறது. அதற்கு முதல் நாள் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் புயல் மையம் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அது கமல் புயல். நானும் ரவுடிதான் ரேஞ்சுக்கு நானும் அரசியல்வாதிதான் என்று கூறிகமல் கட்சிப் பெயர் எனனவோ  டிவிட்டரிலும், வெளியிலுமாக அரசியல் ரீதியான கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார் கமல்ஹாசன் . சமூக கோபத்தையும் அவ்வப்போது காட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் கள அரசியலுக்கு இன்னும் வரவில்லை. அதற்கு வாங்க என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் அழைத்துக் கொண்டுள்ளன. தற்போது அந்த முடிவுக்கு கமல் வந்து விட்டதாக ஊகிக்கப்படுகிறது.

    கமல் பிறந்த நாளில் நவம்பர் 7ம் தேதி கமல் ஹாசன் பிறந்த நாள் வருகிறது. அன்று தனது அரசியல் பிரவேசத்தை முறைப்படி கமல் அறிவிக்கலாம் என்ற ஒரு பேச்சு உள்ளது. இந்தப் பேச்சு சில காலமாகவே இருக்கிறது என்றாலும் தற்போது அது வலுத்து வருகிறது. பல்வேறு தரப்பினருடன் தீவிர ஆலோசனை தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக கமல்ஹாசன் பல்வேறு தரப்பினருடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகள், சட்ட நிபுணர்கள், அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு மட்டங்களில் அவரது ஆலோசனை தொடர்கிறது. இறுதிக் கட்டத்தில் அரசியல் முடிவு தற்போது கமல்ஹாசனின் அரசியல் முடிவு இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அவர் தனது கட்சிப் பெயரையும், கொடியையும் முடிவு செய்து விட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. Replay ரசிகர்களைக் கூட்டி அறிவிப்பு தனது முடிவை தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக அன்றைய தினம் பெரிய அளவில் ரசிகர்களை சந்திக்க மாட்டார் கமல். சிம்பிளாக, மன்ற, நற்பணி அளவிலேயே அது இருக்கும். இந்த முறை பெரிய கூட்டமாககூட்டி சந்திக்க கமல் முடிவு செய்திருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. மக்களின் மன ஓட்டத்தைக் குறி வைத்து நவம்பர் 8ம் தேதி இந்தியா முழுவதும் பண மதிப்பிழப்பு நாளின் ஓராண்டு நிறைவையொட்டி மத்திய அரசுக்கு தனது அதிருப்தியைக் காட்ட திரண்டு கொண்டிருக்கிறது. மக்கள் தங்களது கோபத்தை சமூக வலைதளங்கள் மூலம் அன்று வெளிப்படுத்தவுள்ளனர். இதை ஒட்டி தனது அரசியல் பிரவேசம் நடந்தால் அது பொருத்தமாக இருக்கும் என கமல் கருதுவதாக கூறப்படுகிறது. கமல் கட்சிப் பெயர் எனனவோ கமல்ஹாசனின் கட்சிப் பெயர் என்னவாக இருக்கும், எப்படி இருக்கும். அதில் தேசியம் தெரியுமா அல்லது திராவிடம் தெறிக்குமா என்ற எதிர்பார்ப்பும், ஊகங்களும் ஏற்கனவே கொடி கட்டிப் பறக்கின்றன. பார்க்கலாம், கமல் நிஜமாகவே அன்று வருவாரா இல்லையா என்பதை. பர்ப்போம் 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad