தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள ஆழ்வார் தெருவைச் சேர்ந்த முருகராஜ் என்பவருடைய மனைவி அம்பிகா(48). இவர், அந்த பகுதியில் பெண்கள் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில், ஞாயிறன்று, தன்னுடைய தோழி குருலட்சுமியுடன் என்பவருடன் கடையில் இருந்துள்ளார். அப்போது கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அம்பிகா மீதும் குருலட்சுமி மீதும் மயக்க மருந்தை தெளித்து விட்டு, அவர்கள் அணிந்திருந்த நகைகைள கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் அளித்ததன் பேரில், போலீசார் வந்து சோதனையிட்டதில், அம்பிகா உயிரிழந்து கிடந்தார். மயங்கிய நிலையில் இருந்த குருலட்சுமியை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மயக்கம் தெளிந்ததும் குருலட்சுமி கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சரவணசெல்வி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:
தமிழகம்
