சென்னை: டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான சோதனைகளில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது ஏன் என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.டெங்கு ஒழிப்பின் ஒரு பகுதியாக மாவட்ட கலெக்டர்கள் பல்வேறு நிறுவனங்களில் அதிரடி ரெய்டுகளை நடத்தி வருகிறார்கள். ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் அரசு அதிகாரிகளுடன் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டும். அபராதங்கள் விதிப்பது அரசின் நோக்கமல்ல, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே அபராதம் விதிக்கப்படுகிறது. கொசு உற்பத்தியை தடுக்க காலஅவகாசம் கொடுக்கப்படுகிறது.அதை மீறும் பட்சத்தில் தான் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக, புதுக்கோட்டை அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு நடத்தினார்.
கருத்துகள் இல்லை