ஜெட் ஏர் வெ விமானத்தை கடத்த மிரட்டிய நகை வியாபாரி
ஜெட் ஏர் வெ விமானத்தை கடத்த மிரட்டிய நகை வியாபாரி
ஜெட் ஏர்வேஸ் விமானத்தைக் கடத்துவதாக மிரட்டிய கடிதத்தை எழுதிய ஆசாமி ஏற்கனவே கரப்பான்பூச்சியுடன் விமானத்தில் வந்து அளப்பறை செய்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸ் விமானம் 9W339 நேற்று அதிகாலை 2.55 மணிக்கு டெல்லியில் இருந்து மும்பைக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமான கழிவறையில் ஒரு கடிதத்தைக் கண்டெடுக்கப்பட்டது.
அக்கடிதத்தில் விமானத்தில் 12 கடத்தல்காரர்களும் வெடி பொருட்களும் இருப்பதாகவும் விமானத்தை பாகிஸ்தான் நோக்கி இயக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அதிகாலை 3.45 மணி அளவில் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்குச் சென்று விமானம் தரை இறக்கப்பட்டது.
இந்த மிரட்டல் கடிதத்தை விமானத்தில் போட்டுச் சென்றது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரிஜூ கிஷோர் சாலா என்றும் இவர் நகை வியாபாரி,நகைக் கடை நடத்தி வரும் இவர் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது ..
கருத்துகள் இல்லை