• சற்று முன்

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை 2026, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்


    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச்சந்திரன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் முதலமைச்சர் கோப்பை 2026, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்




    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி.ந.ப்ரியா ரவிச்சந்திரன், வாலாஜா வட்டம், வன்னிவேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில்  முதலமைச்சர் கோப்பை 2026, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்கள் மட்டைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன:

    * அரசினர் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை கைப்பந்து மற்றும் கபாடி

    DAV பெல் பள்ளி - கால்பந்து மற்றும் கையுந்துப்பந்து

    * ஸ்ரீ இராமகிருஷ்ணா பெல் மேல்நிலைப்பள்ளி - கோ-கோ

    * லாலாபேட்டை (தொடுமுறை) அரசினர் மேல்நிலைப்பள்ளி



    -சிலம்பம்

    * ஆற்காடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - மேசைப்பந்து

    * ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - வளைகோல்பந்து

    * ஆற்காடு ஸ்ரீ இராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

    சதுரங்கம்

    * சிறுமலர் மடம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை

    கூடைப்பந்து

    * Young Master Badminton Academy, தாழனூர் – இறகுப்பந்து

    இப்போட்டிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த

    மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது விளையாட்டுத்

    திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    முதலமைச்சர் கோப்பை 2026 மாவட்ட அளவிலான விளையாட்டுப்

    போட்டிகள் 09.09.2026 முதல் 30.09.2026 வரை பள்ளிப் பிரிவு, கல்லூரிப் பிரிவு,

    பொதுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து

    பிரிவுகளில், ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு விளையாட்டு

    மைதானங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

    முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான போட்டி அட்டவணை, பதிவு மற்றும் இதர விவரங்களை tncmtrophy.sdat.in இணையதளத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். மாணவ, மாணவியர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை அதிகரித்தல், அவர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணருதல் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை அடையாளம் காணுதல் ஆகிய நோக்கங்களுடன் இப்போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மோகனா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல், தலைமையாசிரியர் சதீஷ்குமார்  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர் 

    ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad