புழல் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை புழல் சிறையில் அமைச்சர் நிர்மல் குமார் சிறை கைதிகளின் அறைகள், சமையல் அறை , கழிவறை, உள்ளிட்ட சிறை வளாகத்தை ஆய்வு செய்தார்.
தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் ரிமாண்ட் கைதிகள் அறைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டு குறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். சிறை கைதிகளை காண வருவோர் சிரமமின்றி வந்து செல்லவும் அவர்களுக்கு வசதிகள் மேம்படுத்தவும், சிறை கைதிகளிடம் கைபேசி, போதை பொருட்கள் உள்ளே வருவதை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். கைதிகளுக்கு மருத்துவ வசதி மேம்படுத்தப்படும். சிறை கைதிகளை காண வருவோர் கொண்டு வரும் பழங்கள், உடைகள் உள்ளிட்டவைகளை ஸ்கேன் மூலம் பரிசோதித்து வழங்க ஏற்பாடு செய்யப்படும். சிறை கைதிகளுக்கு இரத்த பரிசோதனை சிறை வளாகத்தில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் சிறை கைதிகளுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க வழக்கறிஞர் ஏற்பாடு செய்யப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.






கருத்துகள் இல்லை