இரயில்களிலிருந்து மனித கழிவுகளை மனிதர்கள் மீதே கொட்டும் அவலம்...
சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பேசின் பிரிட்ஜ் வழியாக செல்லக்கூடிய இரயில்கள் அனைத்தும் பேசின் (சிபி) சாலை வழியாக செல்கிறது இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றார்கள் மேலும் அந்த பாதையை பயன்படுத்துகின்றனர்.
தங்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட ரயில்கள் கடந்து செல்லும் பொழுது அதில் உள்ள மனித கழிவுகள் கொட்டப்படுகிறது. அந்த கழிவுகள் பொதுமக்கள் மீது படுகின்றது. எனவே வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இரயில்கள் கடக்கும் வரை நின்று செல்ல வேண்டிய அவலம் உள்ளது. மேலும் மனித கழிவுகள் இவ்வாறு பொதுவெளியில் கொட்டி செல்வதை உடனே தெற்கு இரயில்வே நிர்வாகம் தலையீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனிதக் கழிவுகள் கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் சார்பாக தெற்கு இரயில்வே பொது மேலாளருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டம் சார்பாக நேற்று 20.10.2023 அன்று மனு கொடுக்கப்பட்டது...
உடனே நடவடிக்கை மேற்கொள்ளுமா? இரயில்வே நிர்வாகம்.... பார்ப்போம்.... இல்லையெல் மக்களோடு களத்தில்...
கருத்துகள் இல்லை