அருப்புக்கோட்டை அருகே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டி பகுதியில் ரேசன் அரிசி மூடைகள் கடத்தி கொண்டு வரப்பட்டு, பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் பாலையம்பட்டி கிழக்குத்தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் வட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அந்த கட்டிடத்தில் சுமார் 700 கிலோ அளவிலான ரேசன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசி மூடைகள் கடத்தலில் ஈடுபட்டது யார், எந்தப் பகுதியிலிருந்து ரேசன் அரிசி மூடைகள் கடத்தப்பட்டது என்பது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை