மருத்துவ குணம் கொண்ட மண்ணீரல்
அசைவ உணவான ம் மண்ணீரல் என்பது ஆட்டு இறைச்சியாகும். இந்த மண்ணீரல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தின் இரும்பு சத்தை அதிகரிக்கும். இரத்த சோகைக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இத்துடன் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அவசியம் இந்த மண்ணீரல் சாப்பிடுவது மிகவும் நல்லது.
பெண்கள், பெண் குழந்தைகள் தொடர்ந்து மண்ணீரல் சாப்பிட்டு வந்தால் பருவம் அடையும் போதுஏற்படும் இரத்த போக்கை சமாளிக்க முடியும். மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் இரத்தப்போக்கை ஈடுசெய்ய இந்த மண்ணீரல் பெரும் உதவியாக இருக்கும். பிரசவ காலத்தில் ஏற்படும் இரத்த போக்கை ஈடுசெய்ய மண்ணீரல் பயனுள்ளதாக இருக்கும்.
மண்ணீரல் செய்யும் முறை : மண்ணீரளை கொதித்த வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுக்க வேண்டும் . பிறகு மண்ணீரல் மேலுள்ள மெல்லிய சவ்வை நீக்க வேண்டும். அதன் பிறகு சிறுதுண்டுகளாக நறுக்கி வெங்காயம், தக்காளி, பூண்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு எண்ணெய் விட்டு உடன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதுக்க வேண்டும். தேவையான உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். மிளகு தூள், கொஞ்சம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நீச்சு வாடை தெரியாது. இத்துடன் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்த மண்ணீரல் துண்டுகளை இந்த மசாலாவில் போட்டு 10 நிமிடம் சிறு சூட்டில் வறுத்தெடுக்க வேண்டும். இறகுக்கும் போது கொத்துமல்லியை நறுக்கி மேலே தூவி இறக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை