குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தெப்பத் திருவிழா: 3 வருடங்களுக்கு பின்னர் நடைபெறுவதால் பக்தர்கள் ஆவலுடன் பங்கேற்பு


 மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் தை மாத திப்பத் திருவிழா கொண்டாட்டம் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப தேரில் முருகப்பெருமான் எழுந்தருளும் தெப்பத் திருவிழா இன்று நடைபெறுகிறது. 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், பச்சைக் குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்பம் முட்டு தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக தெப்பத் திருவிழா இன்று நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு காலை 7.30 மணியளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர். சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி சன்னதி தெரு வழியாக ஜிஎஸ்டி சாலையில் உள்ள நகரத்தார் மண்டபத்தில் எழுந்தருளினார்.தெப்பக்குளத்தில்   அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த தெப்பத்தேரில் (மிதவை) தெய்வானையுடன், சுப்பிரமணியசுவாமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதையடுத்து காலை 11 மணியளவில் அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெப்பத்தேரில் இணைக்கப்பட்டிருந்த வடத்தை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தின் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வந்தனர்.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதேபோல இரவில் மின் ஒளியில் வெப்பத்தில் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார் இதனைத் தொடர்ந்து வான வேடிக்கைகளும் இசை கச்சேரிகளும் நடைபெறும்  பின்னர் மேளதாளங்கள் முழங்க  தங்கக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணியிசுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வலம் வந்து சந்நதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.