• சற்று முன்

    மதுரையில் வீட்டில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது


    மருத்துவம் படிக்காமல் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த சம்மட்டி புரம் பகுதியை சேர்ந்த யோக சரஸ்வதி என்ற பெண் கைது. மருத்துவ படிப்பு படிக்காமல் போலியாக டாக்டர் எனக்கூறி வீட்டில் வைத்து கடந்த பல மாதங்களாக மருத்துவம் பார்த்து வந்துள்ளார். 

    இது குறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் செல்வராஜ், பார்மசிஸ்ட் பால செந்தில் ஆகியோர் சென்று பார்த்ததில் யோக சரஸ்வதி போலியாக மருத்துவம்  பார்த்து வந்தது கண்டுபிடித்தனர். தொடர்ந்து எஸ்.எஸ்.காலனி காவல்துறை தகவல் தெரிவிக்கப்பட்டு யோக சரஸ்வதி கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக கொரோனா காலத்தின் போது மருத்துவ படிப்பு படிக்காமல்   மருத்துவர்களாக போலி ஆவணங்கள் மூலம் மருத்துவம் பார்த்து வந்தவர்களை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad