சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதற்காக அர்ஜுன் சம்பத் மீது வழக்கு பதிவு
சமூக வலைதளங்களில் அவதுாறு கருத்து பரப்பியதாக கூறி, ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சமூகவலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த சென்னையை சேர்ந்த ரஹீம் என்பவரும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து, இருவர் மீதும், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினி புத்திரன்
கருத்துகள் இல்லை