Header Ads

  • சற்று முன்

    அவனியாபுரம் அரசுப்பள்ளியில் கலைத் திருவிழா நிகழ்ச்சி

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவரும் நிகழ்சி அவனியாபுரம் அரசுப்பள்ளியில் கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது 4| பள்ளிகளிலிருந்து 250 மாணவர்கள் கலந்துகொண்டனர். மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 41 அரசு பள்ளிகள் இணைந்துமாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கார்த்திகா, மதுரை மாவட்ட கல்வி அலுவலர் விஜயா ஆகியோரின் அறிவுறுத்தலையின்படி அவனியாபுரம் அருகே உள்ள அரசு பள்ளியில், கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக தங்களது தனித்திறமையை வெளிப்படுத்திய பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தி பின்னர் மாநில அளவில் போட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சி முடிவில் வேடர் புளியங்குளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துப்பிள்ளை கூறுகையில். மாணவர்களின் தனித்திறமை, கலை ஆர்வம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக இப் போட்டிகள் நடைபெறுகிறது. ஒன்றிய அளவில் தனித்திறமையுள்ள சிறந்த மாணவர்களை தேர்வு செய்து. மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும். அதில் சிறந்த வெற்றி பெற்ற மாணவர்களை தமிழக அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இப்போட்டிகள் வழிவகுக்கும். என கூறினார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad