விலைவாசி மற்றும் வரி உயர்வை கண்டித்து கீழ்கட்டளை பகுதியில் அதிமுகவினர் ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சொத்து வரி உயர்வு , மின்கட்டண உயர்வு,பால் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் சென்னை பல்லாவரம் அடுத்த கீழ்கட்டளை பகுதியில் அதிமுக சார்பில் பல்லாவரம் பகுதி கழகச் செயலாளரும் முன்னாள் பல்லாவரம் நகர மன்ற துணைத் தலைவருமான ஜெயபிரகாஷ் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் மேலும் இதில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங் அவர்களும் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டு சிறப்புரையாற்றினர். மேலும் இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை