அசூர வேகத்தில் வந்த அதிகாரி மௌனமானது ஏன் ?
சென்னை மாநகராட்சி மண்டலம் 5 ல் ரெனிவல் டிபார்ட்மென்ட் (ARO) பணியாற்றி வரும் அதிகாரியான கஸ்தூரி தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைகளை கண்டறிந்து அபராதம் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார்.
சென்னை பழைய வண்ணரபேட்டை ஜே.பி.கோவில் தெருவில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி நந்தா டிபன் சென்டர் இயங்கி வருகிறது . தணிக்கையில் ஈடுபட்டிருந்த கஸ்தூரி அவரகள் பரபரப்பாக வந்து விதிமுறைகளை மீறி இயங்கி வந்த நந்தா டிபன் சென்டர் கடைக்கு சென்று கடையின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை கண்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வந்த வேகத்தை பார்த்தால் சீல் வைத்துவிடுவார் என்று எதிர் பார்த்தனர் . இறுதியில் வந்த வேகத்தில் திரும்பி சென்று விட்டார். எதோ சம்திங் சம்திங் நடந்திருக்கும் என்று பரவலாக பேசி கொண்டனர்.
கருத்துகள் இல்லை