சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் இருவர் கைது !
சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பதாக பெரம்பூர் செம்பியம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செம்பியம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படி இரு நபர்கள் இருந்தனர் அவர்களை விசாரித்த போது வியாசர்பாடியை சேர்ந்த மதன் மற்றும் பிரேம்நாத் என்பதும் மேலும் அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். மேலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர். அவர்கள் இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்
கருத்துகள் இல்லை