• சற்று முன்

    வங்கியில் புகுந்து பெண் ஊழியரிடம் 95 ஆயிரம் திருட்டு: மர்ம ஆசாமிக்கு வலை

    ஆவடி: ஆவடி காந்திநகர் நாகவல்லி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காந்தம்மாள் (57). ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும், காந்தம்மாள் தனது பேரன் விஜயகுமாருடன் சேர்ந்து தினமும் காலையில் வீடு, வீடாக சென்று ஆவின் பால் விற்பனை செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் காந்தம்மாள் வாடிக்கையாளர்களிடம் சென்று பால் பணத்தை வசூல் செய்தார். வசூலான ₹95 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் ஆகியவற்றை சாப்பாட்டு பையில் வைத்து வங்கிக்கு வேலைக்கு சென்றார். பின்னர், பணத்துடன் கூடிய பையை வங்கியில் உள்ள சாப்பாட்டு அறையில் வைத்தார். தொடர்ந்து மதியம் 12 மணியளவில் காந்தம்மாள் சாப்பாட்டு அறைக்கு வந்து பையை பார்த்தபோது, அங்கிருந்து பை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர், அவர் வங்கி முழுவதும் அந்த பையை தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, காந்தம்மாள் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பணத்துடன் சென்ற காந்தம்மாளை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வங்கிக்குள் சென்று சாப்பாட்டு அறையில் வைத்திருந்த பையை எடுத்து சென்றது பதிவாகியிருந்தது. இதனையடுத்து, போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து விசாரித்து வருகின்றனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad