• சற்று முன்

    இது விழிப்புணர்விற்க்கா அல்லது அல்லது மக்களை மேலும் பீதியை கிளப்பவா !

     கொரோனா தொற்று என்பது கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக மக்கள் பாதிப்புக்குள்ளாவது அனைவரும் அறிந்ததேஇது ஓர் தேசிய பேரிடர் என்று கூறுகின்றனர்.ஆரம்ப காலத்தில் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தொற்று பரிசோதனை செய்து அவர்களுக்கு தொற்று இல்லையென்றாலும் அவரது வீட்டிலே தனிமை படுத்தப்பட்டு வீட்டின் முன் ஸ்டிக்கர் ஓட்டுவார்கள். இதை பார்த்தவுடன் அக்கம்பக்கத்தினர் விழிப்புடன் இருப்பார்கள்

    மேலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள்  மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தால், அவரது இல்லத்தில் ஸ்டிக்கர் ஓட்டுவதற்கு பதிலாக பேனர் கட்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு  உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு மன தெரியும் ஊட்டும் வகையில் பேச வேண்டுமென்றெல்லாம் அரசு அறிவுறுத்திருந்ததுஆனால் தற்போது மாநகராட்சி தொற்று பாதித்தவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தால் அவரது வீட்டின் முகப்பில்  பெரிய பேனர் கட்டி தகரம் அடித்து விடுகின்றனர். இது பார்ப்பவரை விழுப்புணர்வு ஏற்படுத்துவதை விட  அச்சத்தை, பயத்தை ஏற்படுத்துகிறது. வீட்டில் தனிமை படுத்திருக்கும் நோயாளிகளுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது

    கொடுங்கையூர் மண்டலம் 4 வார்டு 34 கட்டபொம்மன் தெருவில்  ஒரு வீட்டின் முன் மேற்கண்ட விளம்பரம் கட்டப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த வாசகம் கொரோனா அபாயம் தடை செய்யப்பட்ட பகுதி என்ற வாசகம் காண்போரை பயத்தை ஏற்படுத்துகிறது. வீட்டில் உள்ள நோயாளிகளுக்கு  போன் செய்து வீட்டின் முன் இப்படி வாசகம்  இருக்கிறது என்று கூறும் போது கொரோனா தொற்றை விட மன உளைச்சல் தான் அதிகமாகிறது. இதை வேடிக்கை பார்ப்பவர்கள் திகில் படத்தை பார்ப்பது போல் பார்க்கின்றனர். இந்த நடைமுறையை கைவிட்டு ஸ்டிக்கர் ஓட்டும் முறையை கையாளவேண்டும் என்று பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.   

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad