Header Ads

  • சற்று முன்

    அதானி துறைமுக விரிவாக்கத்தை கண்டித்து மீனவர்கள் நூதன பிரசாரம்


    பொன்னேரி: பழவேற்காட்டில் கடலும், ஏரியும் இணைந்த பகுதியில் சுமார் 45 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலாகும். இந்நிலையில், பொன்னேரி அடுத்த காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தை பழவேற்காடு வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு பழவேற்காடு மீனவர்கள் கடந்த ஓராண்டாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


    இதனையடுத்து, இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பழவேற்காடு மீன் மார்க்கெட்டில் நேற்று மாலை மீனவர்கள், “அதானி துறைமுகம் வேண்டாம்” என வாசகங்கள் அடங்கிய முகக் கவசங்கள் அணிந்து நூதன முறையில் பிரசாரம் செய்து தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர். மேலும், அதானி துறைமுக விரிவாக்கத்தால் மீன்வளம் அழிந்து மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் இத்திட்டத்தை கைவிடவேண்டும் என்று மீனவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad