• சற்று முன்

    துப்பாக்கிமுனையில் லாரியை கடத்தி ரூ.7 கோடி செல்போன்கள் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை



    காஞ்சிபுரத்திலிருந்து மும்பைக்கு சென்ற கன்டெய்னர் லாரியை மர்மநபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி, ரூ.7 கோடி மதிப்புள்ள செல்போன்களை திருடினர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலையில் இருந்து மும்பைக்கு ரூ.12 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி நேற்று மாலை சென்றது. ஆந்திர மாநில எல்லையில் சென்றபோது, சில மர்ம நபர்கள் மற்றொரு லாரியில் பின்தொடர்ந்து வந்து கன்டெய்னர் லாரியை நிறுத்தினர். லாரி டிரைவரிடம் மாஸ்க் அணிந்த ஒருவர் முகவரி கேட்பதுபோல் நடித்துள்ளார். அப்போது மேலும் சிலர் கூட்டாக சேர்ந்த திடீரென துப்பாக்கியை காட்டி லாரி டிரைவரை மிரட்டி சரமாரியாக தாக்கினர்.

    பின்னர், அவரை கீழே தள்ளிவிட்டு லாரியை கடத்தினர். அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர், நகரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து நெடுஞ்சாலைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, நகரி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் அந்த கன்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது.போலீசார்லாரியை சோதனை செய்தனர். அதில் எடுத்து வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. மீதமுள்ள செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கன்டெய்னர் லாரியை கடத்தி செல்போன்களை திருடிச்சென்ற மர்மபர்கள் யார்? இவர்களுக்கு வேறு யாராவது உடந்தையாக உள்ளார்களா? மேலும் மர்மநபர்கள் எங்கு பதுங்கியுள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரித்து வருகின்றனர்.

    எமது செய்தியாளர் : செந் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad