அவசர ஊர்தி அவசரத்திற்கு வராததால் அரசு ஊழியர் மரணத்திற்கு காரணம் என்று பொது மக்கள் குற்றம் சாற்றுகின்றனர்
தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதியில் மின்சார ஊழியர் டீ.ஜீவானந்தம் கம்பியாளர் மின்சாரப் பெட்டியில் மின்தடை நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் பொதுமக்கள் அவசர ஊர்த்தி அழைத்தும் சம்பவ நேரத்திற்க்கு வர தாமதமானதால் பொதுமக்களே முதலுதவி செய்தும் பலன்தராமல் உயிரிழப்பு ஏற்பட்டது. உரிய நேரத்திற்க்கு அவசர ஊர்தி வரதாதாலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணம் என பொதுமக்கள் கூறுகின்றனர்..அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்ப்பட்டது.
கருத்துகள் இல்லை