Header Ads

  • சற்று முன்

    தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் 5 வது சுற்று தொடக்க விழா வெள்ளிக்கிழமை SRM பல்கலை வளாகத்தில் நடைபெற்றது.


    இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட எஸ்.ஆர் எம் பல்கலை பொது சுகாதாரத்திற்கான பள்ளியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் 5 வது சுற்று தொடக்க விழா வெள்ளிக்கிழமை SRM பல்கலை வளாகத்தில்  நடைபெற்றது.

    காட்டாங்குளத்தூர்  SRM தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தின் பொது சுகாதாரப் பள்ளியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு வட மாசிடோனியா குடியரசின் வெளியுறவுத் துறை பொறுப்பாளர் நேஹத் எமினி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய அரசின் கசாதாரம் மற்றும் குடும்பநலத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட SRM பல்கலையின் பொது சாதாணப் பள்ளியில் 5வது சுற்று கணக்கெடுப்பை நடத்துகிறது. மும்பை சர்வதேச மக்கள் தொகை, அறிவியல் கழகத்தின் மத்திய கண்காணிப்புக் குழு இக்கணக்கடுப்பை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் நடைமுறை படுத்த பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் தகவல்கள் மூலமாக கணக்கெடுப்பு விவர அடிப்படையில் இந்தியாவின் மக்கள் தொகை அறிவியலை பலப்படுத்த முடியும். மேலும் தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு எல்லா ஊர்களிலும்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

    இக்கணக்கெடுப்பு இரண்டாவது கட்டம் செப் 2019க்கும் சூன் 2020 க்கும் இடையில் தொடங்கும். கணக்கெடுப்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் குடும்பம் சம்பந்தமான  மருத்துவ மானுடவியல் மற்றும் உயிர் வேதியியல் குறித்த கேள்வித்தாள்களுக்கான பதில்கள் ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து பெறப்படும். இந்நிகழ்வு புதுச்சேரியில் 2014 நடத்தப்பட்ட  கணக்கெடுப்பில் சுகாதார நிலைபற்றி ஓப்படுவதற்கு ஏதுவாகும். இந்தியாவில் பொது சுகாதார பள்ளி 2007ல் தொடங்கப்பட்டு 100க்கும் மேட்டர் முதுகலை மற்றும் இளங்கலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களும் தொற்று நோயியல் உள்ளிட்ட அறிவியல் கணக்கெடுப்பில் வெற்றிகரமாக பல திட்டமதிப்பீடுகளை அளித்து நிறைவேற்றியிருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad