• சற்று முன்

    ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிடும் இரங்கல் செய்தி.


    கடந்த பாஜக அரசின் நிதி அமைச்சராக இருந்தவர் அருண்ஜெட்லி 66 . சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்தாண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த உடல்நிலை பாதிப்பால் அவர் கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி திடீரென அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த அவர் இன்று மதியம்12.07 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது.  வக்கீலான அவர் 1999 வாஜ்பாய் ஆட்சியில் நிதி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தார்.2009-14 வரை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்தார். 2014 முதல் 2019 வரை மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது. 


    அருண் ஜெட்லி அவர்களின் மறைவு இந்திய திருநாட்டிற்கும் பேரிழப்பாகும் . அருண் ஜெட்லி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad